
காடேக், அக் 31-
மலாக்கா மாநிலத் தேர்தலில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தல் வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்று முடிந்தது.
இதில் தேசிய முன்னணி சார்பில் நடராஜா செல்லப்பா போட்டியிடுகிறார். அவர் எண் 4இல் போட்டியிடுகிறார்.
நம்பிக்கை கூட்டணி சார்பில் ஜெகசீலன் (எண் 1) பெர்சாமா சார்பில் லாவின் (எண் 2 , புத்ரா கட்சியின் சார்பில் லைலா (எண் 3) போட்டியிடுகின்றனர்.
இதன் அடிப்படையில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுவதாக தேர்தல் ஆணைய அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த தேர்தலில் காடேக் சட்டமன்ற தொகுதியில் ம இகா மற்றும் ஜசெக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது

