பாயா ரும்புட் சட்டமன்ற தொகுதியில் டத்தோ அஸ்மான் போட்டி

மலாக்கா, நவ 4-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் டத்தோ அஸ்மான் அபிடின், பாயா ரும்புட் சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றுவதற்குத் தனது அரசியல் அனுபவத்தையும், பிரதமரின் அரசியல் செயலாளராகப் பணியாற்றும் பொறுப்பையும் முக்கிய பலமாகக் கருதுகிறார்.

கூட்டரசுப் பிரதேச PKR கட்சியை வழிநடத்திய அனுபவம், குறிப்பாகப் பல இன மக்கள் வாழும் பகுதிகளில் கட்சியை நிர்வகித்த அனுபவம், பாயா ரும்புட் தொகுதி மக்களுக்குப் பயனளிக்கும் என அவர் தெரிவித்தார்.

கூட்டரசுப் பிரதேச PKR தலைவராக இருப்பது மலாக்காவில் போட்டியிடுவதற்குத் தடையாக இருக்காது என்றும், மாறாக அது தனக்குக் கூடுதல் பலமாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles