மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி அன்பளிப்புக்களை வழங்கி புளு பிரதர்ஸ் சமூக நல இயக்கம் பேருதவி!

கோலாலம்பூர் நவ 4-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்து கேவ்ஸ் ஷங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் தீபாவளி விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், கெஅடிலான் கட்சியின் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவமலர், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேன் கந்தா, கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.கே.கே.ராஜசேகரன், டத்தோ நிர்மலா, மலேசிய இந்தி உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த விழாவில் Blues Brother Welfare Association Malaysia President Tuan Samad, Youth President Datuk Dr M Shankar மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அவர்களுக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி உணவு கூடைகளை வழங்கி புளு பிரதர்ஸ் சமூக நல இயக்கம் பேருதவி புரிந்து மிகவும் பாராட்டுக்குரியது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தமது உரையில் தக்க நேரத்தில் உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்த புளு பிரதர்ஸ் சமூக நல இயக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles