
கோலாலம்பூர் நவ 8-
ஒளியின் திருநாளாம் தீபாவளி பண்டிகை, நம் வாழ்வின் இருளை அகற்றி இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் உன்னதமான நாளாகும்.
சுவையான இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளுடன் இந்த நாளைக் கொண்டாடும் வேளையில், உங்கள் அன்புக்குரியவர்களின் மனதை மகிழ்விக்க இந்தத் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பெரிதும் உதவும்.
வாருங்கள், இந்தத் தீபஒளித் திருநாளில் நமது இதயப்பூர்வமான வாழ்த்துகளைப் பகிர்ந்து, அன்பையும் நேசத்தையும் நாடெங்கும் பரப்புவோம்!
அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட எங்கள் நல்வாழ்த்துகள் என்று பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

