

மா.பவளம்
கோத்தா கெமுனிங், நவ 8-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
மஇகா எம்ஐஇடியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
இன்று கோத்தா கெமுனிங் மென்ஷன் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விருந்து உச்சரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை தந்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்று பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, மலேசியாவுக்கான இந்திய தூதர் சோம்நாத், இலங்கை தூதர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பிற்பகலில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கலந்து சிறப்பித்தார்

