அந்தோனி லோக்கின் ராஜினாமாவை ஏற்கவில்லை: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

மலாக்கா நவ 13-
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது தொடர்பாக, ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக்குடன் மறுபேச்சுவார்த்தை நடத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.

சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிவித்திருந்தார்.

இருந்த போதிலும்,
அந்தோனி லோக்கின் ராஜினாமாவை இதுவரை ஏற்கவில்லை என்று பிரதமர் கூறினார்.

அந்தோணி லோக்கின் ராஜினாமாவை நான் ஏற்கவில்லை. குறுகிய கால விடுப்பு எடுப்பதில் தவறில்லை.

ஆனால் நீங்கள் ராஜினாமா செய்ய விரும்பினால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மலாக்காவில் நம்பிக்கை கூட்டணியின் மாபெரும் இறுதிப் பிரச்சார நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles