இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உத்தரவாதம்

கோலாலம்பூர் நவ 14-

நகரங்களில் வசிப்பவர்களாக இருந்தாலும் சரி, தோட்டப் பகுதிகளில் வசிப்பவர்களாக இருந்தாலும் சரி, கல்வி, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகளில், இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகங்களின் நலனுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இதனை உறுதியளித்தார்.

பள்ளிகள், தமிழ் மொழி, ஆலயங்கள், வர்த்தக சமூகத்தின் நிலை உள்ளிட்ட பல விஷயங்களை அரசாங்கம் இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.

நாங்கள் எங்களால் முடிந்த சிறந்ததைச் செய்து வருகிறோம். ஆனாலும் நாங்கள் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் உள்ளன.

கல்வித் துறையில், இந்து கோவில்கள், இந்திய வர்த்தகர்கள், நகரங்களிலும் தோட்டங்களிலும் உள்ள ஏழை இந்தியர்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை நாம் கவனத்தில் கொண்டு தீர்க்க முயற்சிக்க வேண்டும்.

பிரிக்பீல்ட்ஸ், லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தீபாவளி 2026 கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய வளர்ச்சியால் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயனடைவதை உறுதிசெய்யும் முயற்சிகளுக்கு இணங்க, இன வேறுபாடின்றி மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நல உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மடானி அரசாங்கம் உறுதி செய்யும்.

அனைத்துக் கல்விப் பிரிவுகளையும் உள்ளடக்கி, இந்த ஜனவரி மாதம் ஒவ்வொரு பள்ளி மாணவருக்கும் வழங்கப்படும் 200 ரிங்கிட் உதவித்தொகைக்குக் கூடுதலாக, ரஹ்மா ரொக்கப் பங்களிப்பு, ரஹ்மா அடிப்படைப் பங்களிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த அணுகுமுறையைக் காணலாம் என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles