பிபிபி கட்சியின் தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பு விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் நவ 15-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிபிபி கட்சியின் சார்பில் இன்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்த தமிழ்ப் பள்ளி கந்தையா மண்டபத்தில் திறந்த இல்ல உச்சரிப்பு விமரிசையாக நடைபெற்றது.

பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

பிபிபி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவித் தலைவர் டத்தோ இண்டர் ஜிட், டத்தோ இளையப்பன், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேன் கந்தா, உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கிம்மா கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் காலை 11.00 மணிக்கு சிறப்பு வருகை தந்து டத்தோ டாக்டர் லோகபாலாவுடன் இணைந்து குத்து விளக்கு ஏற்றி விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles