
கோலாலம்பூர், நவ. 16 – மலாக்கா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அவர், மலாக்கா மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதுடன், புதிய மாநில நிர்வாகம் அனைத்து இன மக்களின் நலன்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்கால மேம்பாடு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் முடிவடைந்த நிலையில், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மலாக்காவின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்றும் டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

