கோலா மூடா மாவட்ட காவல்துறை துணைத் தலைவருடன் தேவஸ்தான நிர்வாகத்தினர் மரியாதை நிமித்தமான சந்திப்பு.

கோலா மூடா, நவ 17-
கோலா மூடா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் சூப்பிரிண்டெண்ட் திரு. கணேஷ் ஆறுமுகம் அவர்களை, சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தினர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

இச்சந்திப்பு அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேவஸ்தானத் தலைவர் பெ. இராஜேந்திரன், செயலாளர் எஸ். துரைசிங்கம், துணைச் செயலாளர் எம். இராதாகிருஷ்ணன், பொருளாளர் ந. பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கோலா மூடா மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கணேஷ் அவர்களும் உடனிருந்தார்.

இச்சந்திப்பு இருதரப்பினருக்கும் இடையிலான நல்லுறவையும் சமூக ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles