
கோலாலம்பூர் நவ 16-
வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் பிபிபி கட்சிக்கு தேசிய முன்னணி சார்பில் சீட் கொடுக்கப்படும் என்ற தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி பலத்த கரவொலிக்கு மத்தியில் தெரிவித்தார்.
தேசிய முன்னணி கூட்டணியில் பிபிபி கட்சியும் அங்கம் வகிக்கிறது.
அந்த வகையில் வரும் பொது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்
நேற்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்த தமிழ்ப் பள்ளி கந்தையா மண்டபத்தில் பிபிபி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகபாலா, ம.இகா தேசிய துணைத்தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், ம.சீச பிரமுகர்கள், பிபிபி கட்சியின் மகளிர், இளைஞர் பிரிவு தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சிறப்பாக இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

