உடனடியாக Malaysian indian cabinet committee அமைத்து விரைந்து தீர்வு காணுங்கள்!இந்தியர்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் – டத்தோ ராமா வலியுறுத்தல்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 18-
உடனடியாக மலேசிய இந்தியர்கள் அமைச்சரை குழுவை அமைத்து இந்தியர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.

இதை செய்தால் வரும் பொது தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹராப்பானுக்கு கண்டிப்பாக இந்தியர்கள் ஆதரவு கிடைக்கும் என்று கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த டத்தோ ராமா (ரவாங்) தெரிவித்தார்.

வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பிரதமரை நேரில் சந்திக்க விரும்புகிறோம்.

அப்போது மலேசிய இந்தியர்கள் அமைச்சரை குழுவை உடனடியாக அமைக்கும் படி கோரிக்கை முன் வைப்போம் என்று அவர் சொன்னார் .

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் கெஅடிலான் கட்சி பெரும் தோல்வியை தழுவியது.

பின்னர் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலிலும் கெஅடிலான் கட்சி மீண்டும் பெரும் தோல்வியை தழுவியது.

இதற்கு காரணம் கெஅடிலான் கட்சி தலைவர்கள் மக்களை சந்திக்கவில்லை

குறிப்பாக இந்தியர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

இதனால் இந்தியர்கள் ஆதரவு சரிந்து விட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கெஅடிலான் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்

இதற்கு இந்தியர்கள் அமைச்சரை குழுவை அமைத்து தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய மக்கள் நீதிக் கட்சி எனப்படும் கெஅடிலான் கட்சியில் 4 லட்சம் அதிகமான இந்தியர்கள் இருக்கிறார்கள்.

கட்சிக்காக உழைத்த பழைய தலைவர்களை கட்சி தலைவர்கள் சந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles