டிவ்யாஷினி அசோக் குமார் பி.எச்.டிபட்டம் பெற்றார்

ஷா அலாம் , நவ 18 –

மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு
விழாவில் ஷா அலாம் , தாமான் அலாம் இம்பியானைச் சேர்ந்த
அசோக் குமார் சுப்ரமணியம் – கமலா அப்பாசாமி அவர்களின்
புதல்வி டிவ்யாஷினி Psychology மற்றும் Communications துறையில் PhD
எனப்படும் முனைவர் பட்டம் பெற்றார். மலேசிய பொது பல்கலைக்கழக
மாணவர்களிடையே உணரப்படும் சமூக ஆதரவு, தொழில் வாழ்க்கைக்கான
தகவல் திறன் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பில் மனவுறுதியின் தாக்கம்
என்ற தலைப்பிலான ஆய்வில் டிவ்யாஷினி பட்டம் பெற்றார்.
தமது இந்த வெற்றிக்கு பெரும் துணையாக இருந்த பெற்றோர் , குடும்ப
உறுப்பினர்கள், இணைப் பேராசிரியர் டாக்டர் லாவ் கோ லி சம், டாக்டர் சுவா கா ஹெங் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கும் டிவ்யாஷினி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles