

பெட்டாலிங் ஜெயா, மே 11-
Kelab Rekreasi Medan Younster (MY) Selangor ஏற்பாட்டில் வரும் மே 14 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா Cheng Moh PJ Old Town திடலில் வெட்ரன் கிண்ணக் கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
லீக் பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியில் 32 குழுக்கள் பங்கேற்கிறது. வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை வெல்லும் குழுவுக்கு 7,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று மை எப்சி கிளப் தலைவர் மணி தெரிவித்தார்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 3,000 வெள்ளி, 3 மற்றும் 4 ஆவது இடங்களைப் பிடிக்கும் குழுவுக்கு தலா 1,500 வெள்ளி வழங்கப்படும்.
பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ சாரா மற்றும் வசந்தன் ஆகியோர் போட்டிக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

