லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவராகடத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

கோலாலம்பூர் மே 11-
லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர் சங்கத்தின் தலைவராக டத்தோ அப்துல் ரசூல் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முக்கிய அங்கமாக 2023 – 2025ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தேர்வும் நடைபெற்றது.

இதில் நடப்பு தலைவர் டத்தோ அப்துல் ரசூல் மீண்டும் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
டத்தோ செல்வராஜ் துணைத் தலைவராக தேர்வு பெற்றார்.

செயலாளராக ராஜனும் பொருளாளராக லோகநாதன் தேர்வு செய்யப்பட்ட வேளையில் அருண், இந்திரா, வேலாண்டி ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.

துணைக் குழுவில் ரவிசந்திரன், அரூண், ஷேக் நஸ்ரோன், முகமட் இம்ரான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நாட்டில் உள்ள இந்திய வர்த்தகர்களின் அடையாளமாக லெபோ அம்பாங் விளங்கி வருகிறது.
இந்த லெபோ அம்பாங் வர்த்தக பகுதி மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்தியர்களின் வர்த்தக அடையாளமாக லெபோ அம்பாங்கை உருவாக்க வேண்டும்.

அதே வேளையில் இப்பகுதியில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் எங்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்று டத்தோ அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles