

சுங்கைவே, மே 11-
நான்கு பிள்ளைகளுடன் தனித்து வாழும் தவமணி தேவி பாலாகிருஷ்ணன் என்ற இந்திய மாதுவுக்கு ஹராப்பான் மலேசிய சமூக நல கலாச்சார இயக்கம் இன்று உதவிக் கரம் நீட்டியது.
சுங்கைவே டேசா மெந்தாரி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் தனி அறையில் தனது பிள்ளைகளுடன் இவர் வாழ்ந்து வருகிறார்.
மூத்த மகன் ஜனார்த்தனன் வயது 11
ஸ்தாப்பாக் அகத்தியர் இல்லத்தில் தங்கி படித்து வருகிறார்.
இரண்டாவது மகள்
வைஸூ (வயது 3) சாய்பாபா பாலர் பள்ளி
செண்டரில் பயில்கிறார்.
மூன்றாவது மகன் தர்ஷனுக்கு ஒன்றரை வயது. 4 மகன் நித்திஷன்
இரண்டு மாத பச்சிளம் குழந்தை ஆவார்.
பச்சிளம் குழந்தை நித்திஷனுக்கு
மலம் செல்லும் வழி இல்லை.
அதனால் வயிற்று குடல் வழியாக குழந்தை மலம் கழிக்கிறது.
மாதம் ஒன்றுக்கு பச்சிளம் குழந்தைக்கு பெம்பெஸ் வாங்க 300 வெள்ளி தேவைப்படுவதாக தவமணி தேவி தெரிவித்தார்.
இன்று தவமணி தேவி இல்லத்திற்கு வருகை புரிந்த ஹராப்பான் மலேசிய சமூக நல கலாச்சார இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி மற்றும் கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ்
பிள்ளை ஆகியோர் உதவிக் கரம் நீட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவமணி தேவி குடும்பத்திற்கு உதவி புரிய விரும்பும் நல்லுள்ளங்கள் 0 11-1148 2489 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

