மனிதவள அமைச்சர் சிவகுமார் தலைமையில் ஈப்போவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது உலக கராத்தே போட்டி!

ஈப்போ, மே 12
பேராக் மாநில கராத்தே சங்கத்தின் மற்றும் மலேசிய ஒக்கினாவா கோஜூ ரியோ கராத்தே கூட்டமைப்பு ஏற்பாட்டில் 19ஆவது அனைத்துலக கராத்தே போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இன்று தொடங்கி
வரும் மே 14 ஆம் தேதி வரை ஈப்போ இண்ட்ரா முலியா அரங்கில் நடைபெறும் இந்த போட்டியை
பேராக் மாநில கராத்தே சங்கத்தின் புரவலர் மற்றும் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று ஈப்போ ரோயல் கோல்ஃப் கிளப்பில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மலேசிய, இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், உஸ்பெகிஸ்தான், மொரோக்கோ, சுவிட்சர்லாந்து, புரூணை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 1,300 கராத்தே விளையாட்டாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

பேராக் மாநில கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் அனந்தன் இந்த போட்டியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளார்.

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ வரும் மே 14 ஆம் தேதி போட்டியை நிறைவு செய்து வைக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles