MY FC கிண்ணக் கால்பந்து போட்டியில் MY FC கிளப் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது

Kelab Rekreasi Medan Younstar MY FC Selangor ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா j Old town Road10 திடலில் நடைபெற்ற வெட்ரன் கிண்ணக் கால்பந்து போட்டியில் My Fc கிளப் கிண்ணத்தை தட்டிச் சென்றது

லீக் பாணியில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 16 குழுக்கள் பங்கேற்றன.

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் மேரு இந்தியர் கிளப் My FC கிளப்பை சந்தித்தது .

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மை எப்சி கிளப் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை வென்ற மை எப்சி
கிளப்புக்கு 7,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தைப் பிடித்த மேரு இந்தியர் குழுவுக்கு 3,000 வெள்ளியும், 3 ஆவது இடத்தை பிடித்த My Fc- A team குழுவுக்கு 1,500 வெள்ளியும் 4 ஆவது பிடித்த Nexus Fc குழுவுக்கு 1,000 வெள்ளியும் வழங்கப்பட்டது.

பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ சாரா மற்றும் சிலாங்கூர் மாநில போலீஸ் உயர் அதிகாரி இராஜன் ஆகியோர் வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

மை எப்சி கிளப் தலைவர் மணி தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் வெட்ரன் கிண்ணக் கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles