

ஜொகூர் மாநில பூர்விக குடிமக்களின் (ஒராங் அஸ்லி) குடியிருப்பு நிலத்தின் நிலையை மாற்றுவதை எதிர்த்து சுமார் 200 பூர்விக குடிமக்களின் ஆர்பாட்டம் செய்த விவகாரத்தை மாநில அரசாங்கம் சீர்தூக்கி பார்க்க வேண்டு்ம் என சமுக ஆர்வாளர் சந்திர சேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ஜோகூர் மாநில அரசாங்கம் தேசிய முண்ணனி வாசம் இருப்பதால் மாநில எதிர்கட்சியாக இருக்க வேண்டிய பக்கத்தன் அரசாங்கம் மாநில அரசாங்கத்துக்கு அதரவாக இருக்கிறது .
எனவே மாநில சட்டமன்றத்தில் எதிர்கட்சியாகவும்,மத்தியில் அரசாங்கமாக செயல்படும் நடப்பு ஒற்றுமையாக அரசாங்கம் பூர்விக குடி மக்களின் நில விவகாரத்தில் மாநில அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி ஒரு தீர்வுகாண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

