


கோலத்திரெங்கானு,மே 14
ஒற்றுமை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று திரெங்கானு மாநிலத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஹரிராயா பொது உச்சரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கோலத்திரெங்கானு sultan Zainal Abidin பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த பொது உச்சரிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் முகமட் பாமி, உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் மற்றும் திரெங்கானு மாநில மந்திரி பெசார் அமாட் சம்சூரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இந்த பொது உச்சரிப்பில் கலந்து கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து உரையாடினார்.
கடந்த ஆண்டு இறுதியில் திரெங்கானுவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 5 கோடி வெள்ளி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு ஐந்து கோடி வெள்ளி வழங்கப்பட்டது. இப்போது கூடுதலாக மேலும் 5 கோடி வழங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.

