உலக கராத்தே அரங்கில் பிரபலமானவர் மாஸ்டர் அனந்தன்!மனித வள அமைச்சர் சிவகுமார் புகழாரம்

ஈப்போ மே 13-
உலக கராத்தே அரங்கில் மிகவும் பிரபலமானவர் பேராக் மாநில கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் அனந்தன் ஆவார் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

பல இளம் கராத்தே விளையாட்டாளர்களை உருவாக்கிய பெருமை மாஸ்டர் அனந்தனுக்கு இருக்கிறது.

தனது வாழ்நாளை கராத்தே போட்டிக்காக அர்ப்பணித்து கொண்டவர் மாஸ்டர் அனந்தன்.

பல போராட்டங்களுக்கு இடையே ஈப்போவில் உலக கராத்தே போட்டியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவர் உருவாக்கிய பல கராத்தே விளையாட்டாளர்கள் பல போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமையை தேடித் தந்துள்ளனர் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் குறிப்பிட்டார்.

ஈப்போ இண்ட்ரா முலியா அரங்கில் நடைபெறும் அனைத்துலக கராத்தே போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

உலக கராத்தே போட்டி தொடக்க விழாவில் கெடா கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஸ்டாலின், போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோஸ்ரீ காஸ்விண்டர் சிங், சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி கண்ணன், மலாக்கா காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன், டத்தோஸ்ரீ சேவியர், கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை, டத்தோ ஜெகா – டத்தின் ராம் குமாரி தம்பதியர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles