தன் பிள்ளைகளுக்காக வாழுகின்ற ஒரே ஜீவன் அம்மா! மனிதவள அமைச்சர் சிவகுமாரின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி

கோலாலம்பூர், மே 13-
மே 14 ஆம் தேதி உலக முழுவதும் அன்னையர் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து அன்னையர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மிகப்பெரிய உறவு என்றால் அது அம்மாதான்.

எந்தவித சுயநலமும் இன்றி தன் பிள்ளைகளுக்காகவே வாழுகின்ற ஒரே ஜீவன் அம்மா மட்டுமே!

அத்தகைய அம்மாவின் மேன்மையை போற்றும் வகையில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது
தான் அன்னையர் தினம்.

அந்த வகையில் நம்மை பத்து மாதம் கருவில் சுமந்து ஈன்றெடுத்த அன்னையரை போற்றி மகிழ்வோம் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles