ஒற்றுமை அரசாங்கத்தினால் மலேசியாவுக்கு பிரகாசமான எதிர்காலம்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

கோலாலம்பூர், மே 15-
புத்ரா உலக வாணிப மையம் மெர்டேக்கா அரங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்று நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாடு ஒரு சரித்திரம் வாய்ந்தது.

மொத்தம் 19 அரசியல் கட்சிகள் மற்றும் நான்கு கூட்டணிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் மனிதவள அமைச்சர் என்ற முறையில் நானும் கலந்து சிறப்பித்தேன்.

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலக புத்ரா வாணிப மெர்டேக்கா அரங்கில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் குரல் ஒலித்ததும் ஒரு வரலாறாகும்.

இப்போது நான் உட்பட மொத்தம் 148 எம்பிக்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கிறோம்.

நாங்கள் ஒற்றுமை அரசாங்கத்தை முழுமையாக ஆதரிக்கிறோம், ஏனெனில் அது மலேசியாவிற்கு பிரகாசமான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிளவுபடாத ஆதரவை ஜசெக தொடர்ந்து வழங்கும் என்று ஜசெக துணை தலைவர் கோபிந்த் சிங் மற்றும் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் ஆகியோர் கூறியதை பெரிதும் வரவேற்கிறேன்.

இனங்கள், மதங்கள் இடையே நாங்கள் ஒத்துழைப்பை உருவாக்க விரும்புகிறோம் என்று இந்த மாநாட்டிற்கு பிறகு இவ்வாறு தமது கருத்தை மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு வெளிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles