

நேற்று மே 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் இந்திய சமுக தலைவர் ஐயா திரு. பாலசந்தர் தலைமையில் மலேசிய இந்து சங்கம் கோல குபு பாரு வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் தொண்டர்மணி ஐயா திரு. கலைச்செல்வன் அவர்களின் இல்லத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது..
சுமார் 30 தாய்மார்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
கருவில் பத்து மாதம் சுமந்து குழந்தையை ஈன்றெடுத்த அன்னையை போற்றி புகழும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 14 ஆம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

