பந்திங், கிளானாங் பாரு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய புதிய ரதத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்!

பந்திங், ஜூன் 3-
கோலலாங்காட் பந்திங், கிளானாங் பாருவில் 115 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆலயத் தலைவர் ரெங்கநாதன் ஏழுமலை தலைமையிலான ஆலய நிர்வாகம் 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியில் புதிய ரதத்தை வாங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு ஆலயத் தலைவர் ரெங்கநாதன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பித்தார்.

சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆலய வளாகத்தில் சாமி ஊர்வலமும் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து அம்மனை வழிபட்டனர்.

ஆலய நிர்வாகம் புதிதாக வாங்கியிருக்கும் புதிய ரதத்திற்கு மனிதவள அமைச்சு சார்பில் 50,000 வெள்ளியை வழங்குவதாக அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.

கோலலங்காட் கெஅடிலான் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ், சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி கண்ணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles