லிம் கிட் சியாங்கிற்கு டான்ஸ்ரீ விருது! ஒரு மாபெரும் போராட்டவாதிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கெளரவம்! மனிதவள அமைச்சர் சிவகுமார் பாராட்டு

புத்ரா ஜெயா, ஜூன் 6-
மாட்சியைத் தங்கிய மாமன்னர் பிறந்தநாளை முன்னிட்டு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு டான்ஸ்ரீ எனும் உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் அனைத்து இன மக்களுக்காக தன்னையே அர்ப்பணிந்து கொண்ட ஒரு மாபெரும் தலைவராக டான்ஸ்ரீ லிம் கிட் சியாங் விளங்குகிறார்.

ஒரு மாபெரும் போராட்டவாதிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக இது விளங்குகிறது என்று மனிதவள அமைச்சர் வ. .சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவையாற்றியவர் டான்ஸ்ரீ லிம் கிட் சியாங்.

மேலும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்து சாதனை படைத்திருக்கிறார்.

ஜசெக கட்சி சார்பில் உயரிய விருது பெறும் முதல் தலைவர் இவர் ஆவார்.

தனது வாழ்நாள் முழுவதும் சாமான்ய மக்களுக்காக போராடி பலமுறை சிறை சென்றவர்.

உயரிய நேரத்தில் இவருக்கு டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles