உயில் எழுதும் அவசியம் குறித்த கருதரங்கு – ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி ஏற்பாடு

செமினி, ஜூன் 21-
உங்கள் உயில் உங்கள் கையில் என்ற தலைப்பில் பொது மக்கள் மத்தியில் உயில் எழுதும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி ,தேசிய வகை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்தது.

இக்கருத்தரங்கு கடந்த 18 ஆம் திகதி தேசிய வகை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.இந்த கருத்தரங்கை வழி நடத்த மலேசிய பிரபல பேச்சாளர் வழக்கறிஞர் திரு பாண்டிதுரை வருகை புரிந்தார்.

ஒருவர் வாழும் காலத்தில் சேர்க்கும் அழியும் மற்றும் அழியா சொத்துகளுக்கு உயில் எழுதும் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் ஏன்,எதற்கு,எப்பொழுது உயில் எழுத வேண்டும் என்பதை மிகவும் எளிமையாக மக்களுக்கு வழக்கறிஞர் திரு பாண்டிதுரை கூறினார்.பெரும்பாலான இந்திய மக்கள் உயில் எழுதும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை அவர் தெரிவித்தார்.

அதைக் கருத்தில் கொண்டு ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி இதுபோன்ற மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி மற்றும் மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் ஸ்தாபகர் மற்றும் தேசிய தலைவரான கலைமாமணி டாக்டர் பிரேமக்கண்ணன் தெரிவித்தார்.

மேலும் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த மண்டபத்தைக் கொடுத்த தேசிய வகை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் துணைத்தலைமையாசிரியர் திருமதி சுந்தரிக்கு ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி நன்றி தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles