SOCSO பாதுகாப்பு கிடைக்கும் பொறுப்பு உங்கள் தோள்களில் உள்ளது! மனிதவள அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

கோலத்திரெங்கானு, ஜூன் 20-
சொந்த தொழில் செய்பவர்கள்
சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (Skim Keselamatan Sosial Pekerjaan Sendiri -SKSPS)) மூலம் பல நன்மைகளை பெறலாம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜூன் 18 ஆம் தேதி வரை
மொத்தம் 6 லட்சத்து 34 ஆயிரத்து 215 சுயதொழில் செய்பவர்கள் சுயதொழில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் பதிந்து கொண்டுள்ளனர்.

இந்த நாட்டில் 28; லட்சம் பேர் பாதுகாக்கப்பட வேண்டிய சுயதொழில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு பெறக்கூடியவர்கள்.

ஆனால் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும் என்று மக்கள் புள்ளி விவரங்கள் கூறுகிறது.

சுயதொழில் சமூகப் பாதுகாப்பு திட்டம் 2017 ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஜூன் 18, 2023 வரை, SOCSO
1 கோடியே 55 லட்சம் வெள்ளியை 4 ஆயிரத்து 890 பேருக்கு வழங்கியுள்ளது என்றார்.

அவர்கள் மற்றும்
குடும்பங்கள் விபத்து அல்லது இறக்கும் போது SOCSO மூலம் உதவ முடியும்.

ஏனெனில் அவர்கள் சுயதொழில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் பங்களிக்கின்றனர்.

எனவே, தகுதியான மலேசியர்கள் இந்த திட்டத்தில் பதிவுசெய்து பங்களிக்குமாறு நான் அன்போடு அழைக்கிறேன்

SOCSO பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் அவர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

SOCSO பாதுகாப்பு கிடைக்கும் பொறுப்பு உங்கள் தோள்களில் உள்ளது என்பதால் சுயதொழில் செய்பவர்கள் இன்றே சொக்சோ சுயதொழில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் பதிந்து கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles