2023 மின்னலின் பாடல் திறன் போட்டி! முதல் பரிசு தொகை 10,000 வெள்ளி

மின்னல் எப்.எம்-மின் மற்றுமொரு பிரமாண்ட நிகழ்ச்சியாக 2023 பாடல் திறன் போட்டி நடைபெறவிருக்கிறது.

பாடும் திறன் கொண்ட இளைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த, மின்னல் எப்.எம் இந்தக் களத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில் முதலிடத்தை வெல்பவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் பரிசுத் தொகை காத்திருக்கிறது.

போட்டியின் விதிமுறைகள் :
மலேசியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
வயது வரம்பு : 17 – 30
தமிழ் மொழியில் பாடலைப் பாடி, காணொளியை TikTok-இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அந்தக் காணொளி பதிவில் #bintangminnal2023 என்று கட்டாயம் பதிவிட வேண்டும். காணொளி 2 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
முழுப் பெயர், வயது, வசிக்கும் மாநிலம் ஆகிய விவரங்களை காணொளியில் அவசியம் குறிப்பிட வேண்டும்.

போட்டியாளர்கள் Minnalfm-இன் ‘TikTok’-க்கை கட்டாயம் ‘follow’ செய்ய வேண்டும்.

போட்டியாளர்களின் ‘TikTok’ எல்லாரும் பார்க்கக்கூடிய வகையில் ‘public account’ என ‘setting’ செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சொந்த album அல்லது singles வெளியிட்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது.

பாடல் வெளியீட்டுக்காக ஒலிப்பதிவு நிறுவனங்களுடன் கையெழுத்திட்டிருக்கக்கூடாது.

உள்நாட்டு – அனைத்துலக பாடல் திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் / இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர்கள் இப்போட்டியில் பங்கேற்க முடியாது.

நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை மட்டுமே
மின்னல் எப் எம் தொடர்பு கொள்ளும்.
மேல் விவரங்களுக்கு மின்னலின் சமூக வலைத்தளங்களை நாடலாம் அல்லது அலுவலக நேரங்களில் 03-22887093 என்ற எண்களில் அழைத்து விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles