
ஜொகூர் பாரு, ஜூன் 28-
இந்திய சமூகமும்,அதனை சார்ந்த தலைவர்களும் சிறுமை படுத்தப்படுவது தொடர்கதையாகி விட்ட சூழ்நிலையை தடுக்க மாற்று வழி உருவாக்குவதே சிறந்த அரசியல் தந்திரம் என முன்னால் பெக்கோ சட்டமன்ற வேட்பாளரான திரு சந்திரசேகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மஇகவின் பங்காளி கட்சியான அம்னோவை சேர்ந்த டத்தோ லோக்மன் அடாம் சில தினங்களுக்கு முன்பு மஇக தலைவர்களை சிறுமைப்படுத்தி பேசியதில் இருத்து மீண்டும் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது.
மஇக வேட்பாளர்கள் அம்னோவின் ஆதரவில் வெற்றி பெறுவதால் மீ்ண்டும் இன்று அவமானத்திற்கு ஆளாகி நிற்கிறார்கள் என்றும் இந்த நிலை அடுத்து நம்பிக்கை கூட்டணிக்கு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளது என சமூக ஆர்வாளருமான திரு சந்திர சேகரன் தெரிவித்தார்.
இந்த நிலை மாற வேண்டும் என்றால்,தன் முந்தைய அறிக்கை படி இந்திய வாக்காளர்கள் பெரும்பான்மை கொண்ட தொகுதி உருவாக்க முயற்சியில் இறங்குவதே சாள சிறந்த செயல் என ஜொகூர் மாநில வரிசான் கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளர்.

