

புத்ரா ஜெயா ஜூலை 11-
மனிதவள அமைச்சின் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின்
பணம் செலுத்தி வெற்றி பெறுவோம்
குலுக்களில் 16 அதிர்ஷ்டசாலிகள் இன்று முறையாக தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர் 1 மற்றும் தொடர் 2 க்கான “பணம் செலுத்தி வெற்றி பெறுவோம் JomPAY PTPK” வெற்றியாளர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
மனிதவள அமைச்சர் வ வி.சிவகுமார், துணை அமைச்சர் முஸ்தபா சக்முட் , PTPK இன் தலைமை நிர்வாக இயக்குனர் முகமட் பாட்துல்லா முஸ்தபா ஆகியோர் குலுக்கல் மூலம் 16 அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்தனர்.
திறன் மேம்பாட்டு கழகத்தில் 828 கடன் பெற்றவர்கள் இதில் பங்கேற்றனர்.
இவர்கள் RM891,628.54 பணம் செலுத்தி வெற்றி பெறுவோம் குலுக்கலில் இணைந்தனர்.
இந்த குலுக்கல் RM20,000 மதிப்புள்ள மொத்த பரிசுகளை வழங்குகிறது.
JomPAY கார்ப்பரேஷன் சேனல் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அதிர்ஷ்டக் குலுக்கல்
திறன் மேம்பாட்டு நிதி (PTPK) வர்த்தகத்துடன் இணைந்து
CIMB வங்கியுடன் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

