
மெங்கெலும்பு, ஜூலை 13-
பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதி மெங்கெலும்பு பகுதியில் பி-40 பிரிவைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமாருடன் மெங்கெலும்பு சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சாவ் கலந்து சிறப்பித்தார்.
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றவாறு மனிதவள அமைச்சர் சிவகுமார் உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

