முற்போக்கான ஊதியத்தைப் பற்றிக்குரல் கொடுக்க ரபிஸி ரம்லிக்கு உண்டு! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கெப்பளா பத்தாஸ், ஜூலை 13-
முற்போக்கான ஊதிய விவகாரங்கள் மற்றும் கொள்கைகள் மனித வள அமைச்சின் கீழ் இருந்தாலும், நாட்டிற்கு எது நல்லது என்பது குறித்து தனது கருத்தை தெரிவிக்க பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லிக்கு உரிமை உள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

முற்போக்கான ஊதிய மாதிரியை அமல்படுத்துவதில் நியாயமான தன்மையை அரசாங்கம் உண்மையில் ஆய்வு செய்து வருவதாகவும், ஆகஸ்ட் மாதம் தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் கூட்டத்தில் (NEAC) தனது அமைச்சு இந்த பரிந்துரையை முன்வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊதியப் பிரச்சினை உண்மையில் மனித வள அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

இருப்பினும் பொருளாதார அமைச்சராக இருக்கும் ரபிஸிக்கு, நமது நாட்டிற்கு எது நல்லது என்று கூற உரிமை உண்டு.

கூடுதலாக, நாங்கள் இருவரும் தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (NEAC ) இன் உறுப்பினர்கள்.

நமது நாட்டிற்கான சிறந்த வழிமுறை என்ன என்பதை நாங்கள் விவாதிப்போம், ”என்று அவர் இன்று பினாங்கு கப்பளா பத்தாஸ் தொழில்துறை பயிற்சி நிறுவனத்திற்கு (ILP) வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் மனித வள அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles