

தஞ்சோங் சிப்பாட் ஜூலை 31-
தீவேட் எனப்படும் தொழில் கல்வியை இரண்டாம் தர கல்வியாக கருத வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
தீவேட் தொழில் கல்வியை பயின்றால் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
ஆகவே மாணவர்கள் தயங்காமல் தீவேட் தொழில் கல்வியை தாராளமாக பயிலும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இளைய தலைமுறையினர் குறிப்பாக இடைநிலை கல்வியை முடித்த பிறகு பல்கலைக்கழகம் அல்லது வேலை தேடும் மாணவர்கள் இப்போது தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும்.
காரணம் பல்கலைக்கழகத்தில் பயின்ற 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று 2,500 க்கும் குறைவான சம்பளத்தில் வேலை பார்ப்பதாக சொக்சோவின் வேலை போர்ட்டல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆகவே இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க கல்விக்கு ஏற்ற வேலையை மாணவர்கள் தேடி கொள்ள வேண்டும்.
மேலை நாடுகளில் தொழில் கல்வி சிறந்து விளங்குகிறது.
இந்த கல்வியை பயிலும் மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்கிறார்கள் என்று இன்று தஞ்சோங் சிப்பாட் பத்து லாவூட் தேசிய இடைநிலைப் பள்ளியில் தொழில் ஆய்வு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்

