


சுங்கை பீலேக், ஆக 8-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று சிப்பாங் சுங்கை பீலேக் சமூக மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆரோக்கியமான மலேசியர்கள் எங்கள் தேர்வு என்ற சுலோகத்துடன் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில் மனிதவள அமைச்சர் சிவகுமாரும் கலந்து சிறப்பித்தார்.
இரத்த அழுத்தம், இனிப்பு அளவு உட்பட பலவிதமான நோய்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
சுங்கை பீலேக் சுற்று வட்டார மக்கள் இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்டு நன்மை அடைந்தனர்.
இந்த மருத்துவ முகாமில் மனிதவள அமைச்சின் சிறப்பு அதிகாரி மகேசன்,
சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் சிவகுமார் மற்றும் விஜயகுமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

