தோட்டப் பாட்டாளிகளின் வீடமைப்பு திட்டம் சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேச்சுவார்த்தை! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

ஈஜோக், ஆக 8-
கோலசிலாங்கூர் புக்கிட் ரோத்தான் தாமான் ராஜாவளி சுங்கை பூலோ தோட்டப் பாட்டாளிகளின் வீடமைப்பு திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

நான்கு தோட்டங்களை சேர்ந்த தோட்டப் பாட்டாளிகள் எதிர்காலத்தில் இதே இடத்தில் குடியிருக்க வீடமைப்பு திட்டத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம் மனுவை வழங்கியுள்ளனர்.

கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த தீபன் சுப்பிரமணியத்தை ஆதரித்து மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.

அப்போது
தோட்டத் தொழிற்சங்க தலைவர் கனனேஸ்வரன் இந்த மனுவை நேரில் அமைச்சர் சிவகுமாரிடம் வழங்கினார்.

வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங், புதிதாக பதவி ஏற்கும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் தோட்ட நிர்வாகத்திடம் இந்த வீடமைப்பு திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இதற்கு நல்ல தீர்வு பிறக்கும் என்றார் அவர்.

ஆலயத் தலைவர்
கோபாலகிருஷ்ணன், அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் புவான் ரோட்சியா மற்றும் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜு பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles