பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்தியர்களின் ஆதரவு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

சிரம்பான், ஆக.9-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு இந்தியர்கள் வழங்கி வரும் ஆதரவு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

கடந்த 2008,2013,2018 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு முழு ஆதரவு வழங்கியதை மறக்க முடியாது.

இப்போது பக்கத்தான் ஹராப்பானும் இணைந்து தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ளது.

வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடக்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தியர்கள் பிளவுபடாத ஆதரவை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களுக்கு வழங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது என்று அவர் சொன்னார்.

நேற்று சிரம்பானில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆதரவு திரட்டினார்.

மம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் யாப் இயூ வெங், சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் குணசேகரன் மற்றும் கெப்பாயாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நிக்கோல் ஆகியோரை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles