


சிரம்பான்,ஆக 9-
பிரதமராக பதவி ஏற்றது முதல் இதுநாள் வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டு மக்களுக்காக தன்னலம் கருதாமல் அரயாது உழைத்து வருகிறார் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் உருக்கத்தான் தெரிவித்தார்.
நாடும் மக்களும் நல்ல இருக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது அவர் ஓடி ஓடி உழைக்கிறார்.
நாட்டை மீண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்து வருகிறார்.
பிரதமராக பதவி ஏற்று இப்போதுதான் எட்டு மாதங்கள் ஆகிறது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறந்த முறையில் ஆட்சி செய்க முழுமையாக ஐந்து ஆண்டுகளை வழங்குவோம்.
நாடு இப்போது அமைதியாகவும் சுபிட்சமாகவும் இருக்கிறது.
இது தொடர வேண்டும் என்றால் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பக்கத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நேற்று சிரம்பானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

