


சிரம்பான், ஆக 9-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆட்சியைக் கலைக்க துடித்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சி தரப்புக்கு துணை போக வேண்டாம் என்று மலேசியர்களை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடையிலான ஒற்றுமை அரசாங்கம் அனைவரையும் அரவணைத்து செல்கிறது.
இனங்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மட்டுமே நாட்டில் அமைதி நீடித்திருக்கும்.
ஆனால் இந்த ஒற்றுமை அரசாங்கத்தை விரும்பாதவர்கள் எப்படியாவது ஆட்சிக்கு வர துடித்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு ஒருபோதும் மலேசியர்கள் துணை போகக்கூடாது என்று நேற்று சிரம்பானில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோது மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று ஆட்சி கவிழ்ந்து மூன்று பிரதமர்கள் பதவி ஏற்றதை மலேசியர்கள் மறந்து விடக்கூடாது.
இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆகவே மலேசியர்கள் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி தொடர்ந்து நீடிக்க ஆதரவு தரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

