சமுதாய போராட்டவாதி குணாவை அமோக வெற்றி பெற செய்யுங்கள்! வாக்காளர்களுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

சிரம்பான், ஆக.9-
சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் குணசேகரன் ஒரு சமுதாய போராட்டவாதி ஆவார்.

சீர்திருத்தம் மற்றும் சமுதாய நலன் கருதி பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.

இந்திய சமுதாயத்திற்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் துணிந்து குரல் கொடுத்தவர்.

சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் குணசேகரன் மிகச் சிறந்த வேட்பாளர்.

தொகுதி மக்களுக்கு அளப்பரிய சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் குணசேகரனை சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி மக்கள் அமோக வெற்றி பெற செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்றிரவு சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு குணசேகரனுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆதரவு திரட்டினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் செனட்டர் சிவராஜ், காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles