
புத்ரா ஜெயா ஆக 10-
இன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி நமது அன்புக்குரிய மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு 76 வயது பிறந்த நாள்.
நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதியில் தனது பிறந்த நாளை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதலில் பிரதமருக்கு இந்திய சமுதாயத்தின் சார்பில் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது.
சவால் நிறைந்த இந்த ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் கிடைக்கும் வெற்றியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்குவோம்.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க துடியாய் துடித்து கொண்டிருக்கும் சுயநலவாதிகளை முற்றாக புறக்கணியுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

