

சிரம்பான் ஆக 10-
மலேசியா மடாணி கொள்கையின் அறிமுகம் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடாணி பொருளாதார கொள்கை ஆகியவை மலேசியாவை சரியான பாதையில் கொண்டு செல்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் மலேசியர்கள் அனைவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தோள் கொடுக்க வேண்டும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அதற்கு மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள அரசுகள் இரண்டும் இணக்கப்போக்கை கொண்டு இருக்க வேண்டும்.
இரண்டும் கருத்து வேறுபாடுகள் இன்றி செயல்படும் ஒற்றுமையை கொண்டிருக்கவேண்டும்.
ஆறு மாநில வாக்காளர்கள் மத்திய அரசோடு இணைந்து செயல் படக்கூடிய ஒரு மாநில அரசை தேர்ந்தெடுப்பது நல்லது என்றார் அவர்.
சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் குணசேகரன் மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது வாக்காளர்களை மனித வள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

