

பத்துகேவ்ஸ்,ஆக 10-
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் பத்து லட்சம் வெள்ளி வழங்கப்படுகிறது என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்துள்ள
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆசியோடு இந்த பத்து லட்சம் வெள்ளி மானியத்தை பிரதமர் துறை அமைச்சு அங்கீகரித்துள்ளது மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர்.நடராஜாவிடம் இந்த பத்து லட்சம் வெள்ளிக்கான உறுதி கடிதத்தை அவர் வழங்கினார்.
உலகப் புகழ்பெற்ற பத்துமலை
முருகப் பெருமான் திருத்தலத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் மனித வள அமைச்சர் சிவகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது தேவஸ்தானத்தின் உறுப்பினர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு மானியம் வழங்கும்படி அரசாங்கத்திற்கு டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பிரதமர் துறை அமைச்சு பத்து லட்சம் வெள்ளி மானியத்தை அங்கீகரித்தாக மனித வள அமைச்சர் சிவகுமார் இனிப்பான செய்தியை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

