MYFuture Jobs மூலம் பூர்வீகக்குடி இளைஞர்களுக்கும் வேலை கிடைக்க பெரிதும் உதவுகிறது! மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

கோம்பாக் செத்தியா, ஆக. 11-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் வேலை வாய்ப்பு கண்காட்சி மூலம் Orang Asli எனப்படும் பூர்வீக குடி மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை தேடித் தருகிறது என்று மனிதவள அமைச்சர்
வ.சிவகுமார் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தையும் ஆதரிக்கிறது என்று அவர் சொன்னார்.

PERKESO- HAWA மலேசியா, மனிதவள அமைச்சுடன் இணைந்து HRD Corp மற்றும் Orang Asli மேம்பாட்டுத் துறை (JAKOA) மூலம் நேற்று கோம்பாக் செத்தியா Dewan Serbaguna Jakoa Batu 12, Gombak
Selangor இடத்தில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெற்றது.

பத்துக்கும் மேற்பட்ட முதலாளிகள்
பங்கேற்பு மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு வகைகளில் இருந்து எந்தவொரு முதலாளியுடன் ஒரு நேர்காணலில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது.

இவ்வாண்டு ஜூலை மாதம் வரை SOCSO வேலை வாய்ப்பு கண்காட்சி வழி மொத்தம் 352 ஒராங் அஸ்லி இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

சிறப்பு நேர்காணல் திட்டத்தின் மூலம் இவர்களுக்கு வெற்றிகரமாக வேலைகள் கிடைத்துள்ளன.

மேலும் ஜூலை 21 ஆம் தேதி வரை, MYFutureJobs போர்டல் வழி மொத்தம் 884,688 பேருக்கு வெற்றிகரமாக வேலை கிடைக்க உதவியுள்ளது.

வேலை தேடுபவர்கள் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 213,077 பேர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதன் மூலம் நாட்டில் வேலையின்மை விகிதத்தை குறைக்க முடிகிறது.

நாட்டில்
தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது என்று அவர் சொன்னார்.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Perkeso நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல், டத்தோஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலில் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles