
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் தாமான் சங்காட்டில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஓம்ஸ்ரீ மகா நாகக்கன்னி அம்மன் ஆலயத்திற்கு ஹராப்பான் மலேசிய கலை கலாசார இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி இன்று ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கினார்.
இன்று நடைபெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்ட டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னிக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற ஆலய வருடாந்திர திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

