

பூசிங், ஆக 13-
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள
Pusing, Tokong Tham Sen சீனர்
கோயில் விருந்து நிகழ்ச்சி நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
என்னை அழைக்க மறக்காத கோவில் நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இந்த வாரம் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட கோவில் மண்டபத்திற்கு வெளியில் நடைபாதை அமைக்க 63,200 வெள்ளியை நன்கொடையாக வழங்கி இருப்பதாக அவர் சொன்னார்.
மனிதவள அமைச்சர் சிவகுமார் வழங்கிய நன்கொடையை பெற்றுக் கொண்ட கோவில் நிர்வாகத்தினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

