


ஈப்போ, ஆக 13-
பேராக் மாநிலத்தில் மிகவும் பிரபலமான சங்காட் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று Dewan Kok Tai Pusing மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பள்ளியின் விளையாட்டு போட்டிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக நிதி திரட்டும் வகையில் இந்த விருந்து நிகழ்ச்சி அமைந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சுற்று வட்டார மக்களின் ஆதரவும் பெரும் அளவில் இருந்த வேளையில் மனிதவள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.
இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு எப்போதும் முழு ஆதரவை வழங்குவேன் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் சங்காட் தமிழ்ப்பள்ளிக்கு தமது சார்பில் 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக பெரும் கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார்

