

கோலாலம்பூர், ஆக.12-
விவேகானந்தா தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று இப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஆறாம் ஆண்டைச் சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற்றனர். 12 பேருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அவ்வகையில் சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு வர்ணம் தீட்டும் போட்டியில் ஆறாம் ஆண்டு மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர். இதில் சிறந்த முறையில் வர்ணம் தீட்டிய 12 பேருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி உதயசுந்தரி மற்றும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர், டாக்டர் பி.எஸ்.பிள்ளை ஆகியோர் வழங்கினர்.
பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் இதுவரை பல நடவடிக்கைகளை மாணவர்களுக்காக மேற்கொண்டு வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்குவதாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக வர்ணம் தீட்டும் போட்டிக்கு ஏற்பாடு செய்து வந்துள்ளது. அந்த வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இச்சங்கத்தின் பொறுப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

