
ஷா ஆலாம், ஆக.14-
நேற்று நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில் காஜாங் சட்டமன்ற வேட்பாளர் டேவிட் சியோங் அமோக வெற்றி பெற்றார்.
இவருக்கு பெரிக்காத்தான் மற்றும் பி.எஸ்.எம். ஆகியவற்றிலிருந்து கடுமையானப் போட்டிகள் நிலவின. இதில் பி.எஸ்.எம். சார்பாகப் போட்டியிட்ட பி.அருட்செல்வம் தோல்வியுற்றார்.
அதே நேரத்தில் டேவிட் சியோங் மிகவும் சிறப்பாகச் செயல்படுவார் என்று பாங்கி தொகுதி பி.கே.ஆர். தலைவரும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினருமான பாலமுரளி கோவிந்தராஜு நம்பிக்கைத் தெரிவித்தார்.

