
ஷா ஆலாம், ஆக.14-
டூசுன் தூவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸுக்கு ம.இ.கா உலு லாங்காட் தொகுதித் தலைவர், டாக்டர் வீ.செல்வராஜா தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பெர்சத்துவின் அஸார் ஹம்பாலி மற்றும் மூடா கட்சியின் அல் ஹஃபிஸ் இக்வான் முகமட் அசாஆட் ஆகியோரை வீழ்த்தி 26,755 வாக்குகளுடன் ஜொஹான் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஜொஹான் மக்களுக்குச் சிறப்பாகச் சேவையாற்றுவார் என்று டாக்டர் செல்வராஜா நம்பிக்கைத் தெரிவித்தார்.

